இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “மக்களவை ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சித் தலைமையின் உத்தரவின் பேரில் மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான பேச்சுகளை பாஜக தலைவர்கள் பொது மேடைகளில் நிகழ்த்திவருகின்றனர்.
டெல்லி வன்முறையில் அப்பாவி உயிர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் நரேந்திர மோடி எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட அவரது கட்சித் தலைவர்கள்தான் கலவரத்தை ஏற்படுத்தி மக்களைக் கொல்ல தூண்டினர். அவர்கள் இந்த அறிக்கைகளை தாங்களாகவே செய்தார்களா? இல்லை. இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுமாறு கட்சித் தலைமையால் அவர்கள் வழிநடத்தப்பட்டனர்.