ஆந்திர மாநில மக்களும் அம்மாநிலக் கட்சிகளும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதிலும் பகிர்வு உத்தரவாத சட்டத்தை அமல்படுத்துவதிலும் மத்திய அரசு தங்களுக்கு அநீதி இழைத்துவிட்டதாக குற்றம் சாட்டிவருகின்றனர்.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 10ஆம் தேதி மோடி அந்திர மாநிலம் குண்டூருக்கு செல்லவுள்ளார்.
இதையடுத்து 13 மாவட்டங்களில் தெலுங்கு தேசம், காங்கரஸ், இடது சாரிகள் உள்ளிட்டக் கட்சிகள் போராட்டத்தை தொடங்கியுள்ளன. கருப்பு கொடிகளை ஏந்தி பேரணியாக சென்றும், காலிப் பானைகளை உடைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து இன்று நெல்லூரில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடிக்கு ஆந்திர மாநிலம் வருவதற்கு எந்தவித தகுதியும் இல்லை எனவும் அம்மாநில மக்களை அவர் ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு தெலுங்கு தேச கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியை விட்டு பிரிந்த பிறகு மோடி அந்திராவுக்கு செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.