கரோனா வைரஸ் (கோவிட்19) குறித்து முன்கூட்டியே அறிந்ததால், அது தொற்று நோயாக பரவாமல் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்துவருகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களின் எல்லைகளை மூடியுள்ளன.
பொது போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. குடிமக்கள் வீடுகளிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாடு முழுக்க 82 மாவட்டங்களை முழுமையாக பூட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.
இந்த மாவட்டங்களிலும் நடக்கும் விபரீதம் அறியாமல் பொதுமக்கள் கவனக்குறைவாக இருக்கின்றனர். கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் முதல் படிதான் இது. நாம் இன்னும் சிலவற்றை சகித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் சுய தனிமைக்கு கட்டுப்படாத இத்தாலி போன்ற நாடுகள் இப்போது கடுமையான அச்சத்துடன் நடுங்குகின்றன.
சீனாவின் வூகானில் முதலில் அறியப்பட்ட கரோனா வைரஸ் ஆரம்பக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை கொன்றது. இந்தியாவில், வெளிநாட்டு பயணிகள் மூலம் முதன்முதலில் நாட்டுக்குள் கரோனா வைரஸ் தொற்று வந்தது. இது சமூக பரவலாக மாறாமல் இருக்க இந்தியர்கள் தங்களை தாங்களே வீடுகளில் அடைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் கிராமங்களில் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதும் அவசியமாகும். ஏனெனில் கிராமங்களின் பொதுசுகாதாரம் குறித்து நாம் அறிவோம். ஆகவே கிராமங்களின் எல்லைகளை தடுப்பதும், கிராமங்களில் சுய தனிமையும் மிகவும் அவசியமாகிறது.
கரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் வார்டு கொடிய வைரஸ் உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில், தனிமைப்படுத்துதல் ஒரு தண்டனை அல்ல. ஆகவே நமக்கொரு பாதுகாப்பு கவசம் அவசியம். அந்த வகையில் தனிமைப்படுத்துதலை மீறும் பத்து நபர்களை நாம் சோதித்து பார்க்கலாம்.
இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவெனில், கரோனா பாதிக்காதவர்களும் தன்னைதானே தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம். சீனாவில் ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பரவ ஆறு நாட்களை எடுத்துக்கொண்டது.
நான் கரோனா வந்திருக்கிறேன், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் காவலர் அதன் பின்னர் நான்கு நாள்களில் அது ஐந்து ஆயிரத்தையும் (5000), அடுத்த மூன்று நாள்களில் பத்து ஆயிரம் (10,000) பேருக்கும் பரவியது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் முதல் இரண்டு நாள்களில் மட்டும் பத்து ஆயிரம் (10,000) பேருக்கு பரவியது. இந்தப் புள்ளி விவரங்கள் நமக்கு அறிவுறுத்துவது ஒன்றே ஒன்றுதான். குடிமக்கள் தளர்வாக இருக்கக் கூடாது.
கரோனா பாதிப்பிலிருந்து நம்மை காக்கும் கடவுளான சுகாதாரப் பணியாளர்கள் கரேனா வைரஸ் வூகானில் பரவியதும், சீனா எடுத்த தடுப்பு நடவடிக்கையில் முக்கியமானது அந்நகரை தனிமைப்படுத்தியது. அதன் பின்னர் வூகானில் கரோனா பரவலும், இறப்பு விகிதமும் குறைந்தது.
இந்த நடவடிக்கைக்கு பின்னர் வூகானில் இறப்புவிகிதம் 3.1 விழுக்காடு ஆகவும், மற்ற மாநிலங்களில் 0.16 விழுக்காடு ஆகவும் இருந்தது. தற்போது மற்ற நாடுகள் தனிமைப்படுத்துதல் நடவடிக்கை எடுக்க இதுவே தூண்டுகோலாக உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அலோஸ்காவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு பலர் பாதிக்கப்பட்ட போது அமெரிக்காவும் இதே திட்டத்தை செயல்படுத்தி அந்நகரை தனிமைப்படுத்தியது. ஆறு ஆயிரம் பேரை கரோனாவிடம் இழந்துள்ள இத்தாலியும் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் பாதுகாக்கப்பட வேண்டும். கரோனா (கோவிட்19) வைரஸ் தொற்று நோய்க்கு தடுப்பூசி எப்போது கண்டுபிடிக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது.
மேலும் உறுதியான சிகிச்சை கூட இல்லை. இதற்கிடையில் கோடிக்கணக்கான உயிர்களை அரசு பாதுகாக்க வேண்டும். கிராமங்களும் சிறு நகரங்களும் தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் ஸ்பானிஷ் காய்ச்சலால் ஏற்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை முதலாம் உலகப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. இது அரசாங்கமும் குடிமக்களும் ஒரே பக்கத்தில் இருக்க வேண்டிய காலம்.
வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், நாட்டு மக்களை கைக்கூப்பி வணங்கும் பிரதமர் நரேந்திர மோடி இங்கு அலட்சியத்திற்கு இடமில்லை. பூட்டப்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு தொடர்ந்து அத்தியாவசிய பொருள்கள் வழங்குவதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்யவேண்டும். இந்தியாவில் உள்ள 50 கோடி தொழிலாளர் எண்ணிக்கையில், 85 சதவீதம் ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளுக்கு சொந்தமானது.
கிராமப்புறங்களை பொறுத்தமட்டில் தினசரி கூலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அரசாங்கங்களின் ஒரே நோக்கம் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதேயாகும். மேலும் பொருள்களின் பற்றாக்குறையையும் தடுக்க வேண்டும்.
கோவிட்19 தொற்றுநோயிலிருந்து இந்திய கிராமங்களை பாதுகாக்க முடிந்தால், இந்தியா கிட்டத்தட்ட வெற்றிகரமாக இருக்கும். ஒவ்வொரு குடிமகனும் ஒற்றுமையாக நகரும்போதுதான், கரோனா (கோவிட்-19) வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான கூட்டுப் போரில் நாடு வெற்றி பெறும்.
இதையும் படிங்க: 'புதினுடன் மோத முடிவெடுத்த சவூதி அரேபியா'- எண்ணெய் போரின் கதை!