தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முகமூடிகள், வென்ட்டிலேட்டர்களைப் போதுமான அளவில் மருத்துவமனைகள் சேமித்துவைக்க அறிவுறுத்தல் - கரோனா வைரஸ்

டெல்லி: கரோனா வைரஸ் தாக்குதலால் நாளுக்கு நாள் அதற்குப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவதால், மருத்துவமனைகளில் அதிக அளவு முகமூடிகள், வென்ட்டிலேட்டர்களைச் சேமித்துவைக்குமாறு சுகாதார அமைச்சகம் அறிவுரை வழங்கியுள்ளது.

Health Ministry to hospitals
Health Ministry to hospitals

By

Published : Mar 21, 2020, 1:58 PM IST

Updated : Mar 21, 2020, 3:04 PM IST

சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்தியாவிலும் அதன் வீரியம் அதிகரித்துக்கொண்டே வருவதால், கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.

பொதுமக்கள் முடிந்த அளவு வீட்டில் இருக்குமாறும், அதிகமாகக் பயணிக்க வேண்டாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் சுகாதார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவமனைகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட அறைகளை உருவாக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

மேலும், முகமூடிகள், வென்ட்டிலேட்டர்களைப் போதுமான அளவில் சேமித்துவைக்குமாறும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தெலங்கானாவில் அதிகரிக்கும் கரோனா தொற்று - எண்ணிக்கை 18ஆக உயர்வு!

Last Updated : Mar 21, 2020, 3:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details