டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பங்களாவில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி 1997ஆம் ஆண்டு முதல் வசித்துவருகிறார். இதனிடையே, அவருக்கு சிறப்புப் பாதுகாப்புக் குழு திரும்பப்பெறப்பட்டது.
இதனால், அவர் வசிக்கும் டெல்லி வீட்டைக் காலிசெய்ய மத்திய அரசு சம்மன் அனுப்பலாம் என தகவல் வெளியானது. இதை தடுக்கும் நோக்கில்தான், மாநிலங்களவைத் தேர்தலில் அவரை போட்டியிட வைக்கலாம் என காங்கிரஸ் திட்டமிட்டுவருவதாக கூறப்படுகிறது.