தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 31, 2020, 5:41 PM IST

ETV Bharat / bharat

ஜாமியா துப்பாக்கிச் சூடு: பிரியங்கா தாக்கு!

டெல்லி: ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிரியங்கா காந்தி பாஜகவினரை குற்றஞ்சாட்டி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

When Union Mins incite people to shoot, such incidents are possible: Priyanka Gandhi on Jamia firing
When Union Mins incite people to shoot, such incidents are possible: Priyanka Gandhi on Jamia firing

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர்.

இதில் நேற்று மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த கோபால் என்ற இளைஞர் ஒருவர் சுதந்திரம்தானே வேண்டும், எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி தான் வைத்திருந்த துப்பாக்கியை வைத்து கூட்டத்தை நோக்கி சுட்டார். இதில் மாணவர் ஒருவர் காயமடைந்தர்.

இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், “ஆளும் பாஜக அரசு மக்களை துப்பாக்கியால் சுட வேண்டும் என ஆத்திரமூட்டும் பேச்சுகளை பேசுகின்றனர். இதனால் இது போன்ற குற்றங்கள் சாத்தியமாகிறது.

பிரியங்கா காந்தி டுவீட்

பிரதமர் நரேந்திர மோடி எந்த மாதிரியான டெல்லியை கட்டமைக்க நினைக்கிறார்? வன்முறையா? அகிம்சையா?
வளர்ச்சியா? அராஜகத்துடனான அரசா?” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க...நிர்பயா குற்றவாளி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details