உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டம் உம்பா கிராமத்தில் கடந்த ஜூன் மாதம் 17ஆம் தேதி நில தகராறு காரணமாக இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் பழங்குடியின மக்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் 21 பேர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தனர்.
உ.பி. கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் பிரியங்கா காந்தி!
லக்னோ:உத்தரப் பிரதேச மாநிலம் சோன்பத்ராவில் ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை பிரியங்கா காந்தி இரண்டாவது முறையாக சந்தித்தார்.
அப்போது உத்தரப் பிரதேச கிழக்கு பகுதி காங்கிரஸ் பொறுப்பாளரான பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க முற்பட்டார். ஆனால் காவல் துறையினர் சந்திக்கவிடவில்லை. இருந்தபோதிலும் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்கமால் செல்ல முடியாது என ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். கடைசியாக பாதிக்கப்பட்டவர்களை பிரியங்கா சந்தித்தார்.
இந்நிலையில் இன்று இரண்டாவது முறையாக அந்த கிராமத்திற்கே சென்ற பிரியங்கா காந்தி, சோன்பத்ரா கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.