உத்தரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா கிராமத்தில் இரு சமூகங்களிடையே நில பிரச்னையால் ஏற்பட்ட தகராறின்போது, நடந்த துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் உயிரிந்தனர். இது மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய 24 பேரை உத்தர பிரதேச காவல்துறை கைது செய்தது.
பிரியங்கா காந்தி கைது!
லக்னோ: சோன்பத்ரா நில பிரச்னையின்போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
பிரியங்கா காந்தி
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க உத்தரப்பிரதேச கிழக்குப்பகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் பிரியங்கா காந்தி, சோன்பத்ரா கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு 144 தடை விதிக்கப்பட்டிருந்ததால், பிரியங்கா காந்தி வழியிலேயே கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து பிரியங்கா காந்தி கூறுகையில், " என்னை எங்கு அழைத்துச் செல்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை. ஆனால் எங்கு கூட்டி சென்றாலும் செல்வேன்" என்றார்.