நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கங்கை ஆற்றில் படகு பயணத்தை மேற்கொண்டார். இதன் மூலம் கங்கை ஓரத்தில் இருக்கும் பகுதிகளில் பரப்புரை செய்தார்.