புதுச்சேரி மாநிலம், ஒதியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன். இவர் நேற்று இரவு தனது மகளை முதலியார்பேட்டையில் உள்ள டியூசன் சென்டருக்கு அழைத்துச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சென்னையில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, ராமசந்திரன் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரில் அவரது மகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் ஆத்திரமடைந்து பேருந்தை அடித்து நொறுக்கினர்.
தனியார் பேருந்து மோதி மாணவி பலி - தந்தை கண்முன்னே நேர்ந்த துயரம்! - accident
புதுச்சேரி: பைக் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் தந்தை கண்முன்னே மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மாணவி
பின்னர் இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, விபத்து தொடர்பாக பேருந்தின் நடத்துநர், ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனியார் பேருந்துகள் போட்டிப் போட்டுக்கொண்டு செல்வதால் அவ்வப்போது இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.