தமிழ்நாடு

tamil nadu

கரோனா நிதி கேட்டும் பிரதமர் பதிலளிக்கவில்லை - நாராயணசாமி குற்றச்சாட்டு

By

Published : May 20, 2020, 7:41 PM IST

புதுச்சேரி: கரோனா நிதி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் வரவில்லை என முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி யூனியன் பிரதேசம் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவில்லை.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடிக்கு நிதி கேட்டு கடிதம் எழுதியுள்ளோம். இருப்பினும் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

புதுச்சேரிக்கு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் கரோனா தொற்று பரவுகிறது. ஆகவே, அவ்வாறு வருபவர்களுக்கு கரோனா தொற்று இல்லை என்றாலும், 14 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள் ஊரடங்கில் வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேட்டூர் அணை திறக்கும் சமயத்தில் குறுவை விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்க ஒரு டிஎம்சி கிடைக்க ஆயத்தப்பணிகளை அலுவலர்கள் செய்ய கூறியுள்ளேன். துறை அமைச்சர் கமலக்கண்ணன் தலைமையில் கூட்டம் கூட்டி முடிவு செய்து அதன் மூலமாக கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர தமிழ்நாடுஅரசுடன் பேசி நடவடிக்கை எடுக்க ஆயத்த வேலைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.

இதையும் படிங்க: தனியார் மயமாக்கம் ஜனநாயகத்துக்கு அழகல்ல - புதுச்சேரி முதலமைச்சர்!


TAGGED:

ABOUT THE AUTHOR

...view details