தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"முழு நாடும் தெலங்கானா மக்களுக்கு துணை நிற்கும்" - ராம்நாத் கோவிந்த்!

ஹைதராபாத்: தெலங்கானா மாநில வெள்ளப் பாதிப்புகள் குறித்து அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டறிந்து நம்பிக்கை தெரிவித்தார்.

president-ramnath-govind
president-ramnath-president-ramnath-govindgovind

By

Published : Oct 14, 2020, 9:46 PM IST

தெலங்கானா மாநிலம், தலைநகர் ஹைதராபாத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக நகர் முழுவதும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.

அதனால் அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை ஆணையர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோரிடம் பேசி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது வரை வெள்ளத்தால் 15 வயது சிறுமி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இருவரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், இந்த பேரிடர் காலத்தில் முழு நாடும் தெலங்கானா மக்களுக்கு துணைநிற்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க:வெள்ளத்தில் மிதந்த தெலங்கானா; பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது!

ABOUT THE AUTHOR

...view details