தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசுமுறை பயணமாக ராம்நாத் கோவிந்த் ஆப்பிரிக்கா பயணம் - ராம்நாத் கோவிந்த்

டெல்லி: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏழு நாள் அரசுமுறை பயணமாக பெனின் உள்ளிட்ட மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு இன்று செல்கிறார்.

ராம்நாத் கோவிந்த்

By

Published : Jul 28, 2019, 11:25 AM IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஆப்பிரிக்க நாடுகளான பெனின், காம்பியா, கினி ஆகி நாடுகளுக்கு ஏழு நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இதுவரை எந்தக் குடியரசுத் தலைவரும் மூன்று ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதில்லை. இது அவருடைய மூன்றாண்டு பதவிக்காலத்தில் முக்கிய பயணமாக அமையும் எனத் தெரிகிறது.

இந்தப் பயணம் ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவினை வளர்க்கவும் தொழில் முதலீடு, வர்த்தகம், எரிபொருள் குறித்து ஆலோசிக்கவும் உதவும் எனவும் கூறப்படுகிறது. மேலும், ராம்நாத் கோவிந்த் அந்த நாடுகளின் மக்கள் பிரதிநிதிகளின் அவைகளில் உரையாற்றவிருக்கிறார்.

இந்தப் பயணத்தில் ராம்நாத் கோவிந்த்துடன் மத்திய அமைச்சர் பிரதாப் சந்திர சாரங்கி, நாடாளுமன்ற உறுப்பினர் திலிப் கோஷ் ஆகியோர் செல்லவுள்ளனர்.

மேலும், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தி, கதர் ஆடைகள் குறித்த கண்காட்சியை ராம்நாத் கோவிந்த்தொடங்கி-வைக்கவுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details