முன்னாள் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் கடந்த 9ஆம் தேதி சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
அருண் ஜேட்லியை சந்தித்து குடியரசு தலைவர் நலம் விசாரிப்பு - ராம்நாத் கோவிந்த்
டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
Jaitley
முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.