தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குப்பையில் கிடந்த குழந்தை உயிரிழப்பு! - ஹரியானாவில் குப்பையில் கிடந்த குழந்தை

சண்டிகர்: மருத்துவமனை குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.

குப்பையில் கிடந்த குழந்தை உயிரிழப்பு
குப்பையில் கிடந்த குழந்தை உயிரிழப்பு

By

Published : May 29, 2020, 12:15 PM IST

ஹரியானாவில் உள்ள பாட்டீல் நர்சிங் ஹோமில் ஒரு பெண் குறை மாதத்தில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அதில் ஒரு குழந்தை பிறந்த உடனேயே இறந்தது. உயிருடனிருந்த மற்றொறு குழந்தையின் எடை குறைவாக இருந்ததால் அந்த குழந்தையை அவரது பெற்றோர் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டுச் சென்றனர்.

இதையடுத்து, மருத்துவமனை குப்பைத் தொட்டியில் கிடந்த குழந்தையை கண்ட இளைஞர் ஒருவர், அந்த குழந்தையை வீடியோ எடுத்து அதனை காவல் துறையினருக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கூறியுள்ளார். ஆனால், காவல் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பல மணி நேரத்திற்குப் பிறகு சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சம்பந்தப்பட்ட மருத்துவமனை அலுவலரிடம் விசாரணை நடத்தவுள்ளதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details