ஒடிசா மாநிலம் நுவபாடா பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் மஜ்ஜி. இவரின் மனைவி பிரமிலா மஜ்ஜி. கர்ப்பிணியான இவருக்கு நேற்று பிரசவ வலி எடுத்துள்ளது. இதனையடுத்து மஜ்ஜியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். இரவு நேரம் என்பதால் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வரமுடியவில்லை.
நான்கு கி.மீ., கட்டில் பயணம்; வழியிலேயே பிறந்த பெண் குழந்தை! - புவனேஷ்வர்
புவனேஷ்வர்: கர்ப்பிணியை கட்டிலில் படுக்க வைத்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்லும்போது, வழியிலேயே பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை
இதையடுத்து, முகேஷ் மஜ்ஜி மற்றும் அவரின் உறவினர்கள், பிரமிலா மஜ்ஜியை கட்டிலில் படுக்க வைத்து 4 கிமீ தூக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது, பிரமிலா மஜ்ஜிக்கு வலி அதிகமானதால், அவருக்கு வழியிலேயே உறவினர்கள் பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், அருகில் உள்ள மருத்துவமனையில் தாய் மற்றும் குழந்தையை உறவினர்கள் அனுமதித்தனர். இருவரும் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.