காட்டு யானை ஒன்று கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள கிராமத்தில் புகுந்துள்ளது. அப்போது கிராமவாசிகள் சிலர், அன்னாசிப் பழத்தில் வெடியை மறைத்துவைத்து, அந்த யானைக்கு கொடுத்ததாகத் தெரிகிறது.
யானை அந்த அன்னாசிப் பழத்தை கடித்தபோது, வெடி வெடித்து அதன் வாய்ப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயத்தினால் ஏற்பட்ட கடும் வலியுடன் வெள்ளாறு நதியில் இறங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அலுவலர்கள், கும்கி யானைகளின் உதவியுடன் கர்ப்பிணி யானையை மீட்க முயன்றனர்.
ஆனால் கர்ப்பிணி யானை அதற்கு அனுமதிக்கவில்லை. ஆற்றிலேயே நீண்ட நேரம் நின்ற அந்த யானை, மே 27ஆம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது. இச்செய்தியை கேரள வனத்துறை அலுவலர் மோகன் கிருஷ்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில்பகிர்த்திருந்தார். இக்கொடூர செயலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்துவருகின்றனர்.