கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுபடுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், செய்தியாளர்கள் ஆகியோர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒடிசா மாநிலம் நபரங்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மினாட்சி என்ற செவிலி தான் நிறைமாத கர்ப்பமாக உள்ள நிலையிலும் கரோனா தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், " நான் பணிபுரியும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பல்வேறு மருத்துவ சிகிச்சைக்களுக்காக வருகின்றனர். இதனால், நான் நாள்தோறும் மருத்துவமனைக்கும் எனது வீட்டிற்கும் பயணித்து மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறேன்.
நோயாளிகளுக்கு சிகிச்ச்சை அளிக்கும் கர்ப்பிணி செவிலியர் இதனிடையே, நான் கர்ப்பமாக உள்ளதால் என்னுடன் பணிபுரியும் சக மருத்துவர்கள், மூத்த ஊழியர்கள் என்னை விடுப்பு எடுத்துக்கொண்டு ஓய்வெடுக்குமாறு வலியுறுத்தினர். ஆனால், சிகிச்சைக்காக வருபவர்களுக்கு எனது சேவை தேவை என்று கூறினேன். மற்ற ஊழியர்களை காட்டிலும் எனக்கு ஊதியம் மிகவும் குறைவுதான். அதை எப்போதும் பெரிய விஷயமாக நான் எடுத்துக்கொண்டதில்லை.
கரோனா பணியில் ஈடுபட்டு வரும் கர்ப்பிணி பெண் என் கடமையை ஏற்றுக்கொண்டு நோயாளிகளுக்கு எனது பணியைச் செய்து வருகிறேன். மேலும் இந்த கரோனாவை கட்டுபடுத்த ஏராளமானோர் தங்களது உயிரை பணையம் வைத்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில், நானும் எனது கடமையை பொறுப்புணர்வோடு செய்கிறேன் என்று நினைப்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. கரோனாவை எதிர்த்து போராடுவோம், காரோனாவை வெல்வோம்" என்றார்.
இதையும் படிங்க:வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த இரு இளைஞர்கள் விஷம் குடித்து தற்கொலை!