கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் அடுத்த ஒன்பது மாதங்களில் இந்தியாவில் குழந்தைகள் பிறப்பு அதிகரிக்கும் என யூனிசெஃப் தெரிவித்துள்ளது.
இது குறித்து யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் அடுத்த ஒன்பது மாதங்களில் உலகம் முழுவதும் 116 மில்லியன் (11 கோடியே 60 லட்சம்) குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.
இந்தியாவில் மட்டும் 2.01 கோடி குழந்தைகள் பிறக்க உள்ளன. சீனாவில் 1.35 கோடி குழந்தைகள் பிறக்கும். நைஜீரியாவில் 64 லட்சம் குழந்தைகளும், பாகிஸ்தானில் 50 லட்சம் குழந்தைகளும், இந்தோனேசியாவில் 40 லட்சம் குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.