ஆந்திராவில் லட்சக்கணக்கான வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியதற்கு ஐக்கிய ஜனதா தளத்தின் துணை தலைவரும் தேர்தல் ஆலோசகருமான பிரஷாந்த் கிஷோர் என்ற பிகாரி திருடன்தான் காரணம் என ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு குற்றம் சாட்டி இருந்தார்.
சந்திர பாபு நாயுடு கூறும் குற்றச்சாட்டில் ஆதாரமில்லை - பிரஷாந்த் கிஷோர் - குற்றச்சாட்டுக்கு
டெல்லி: சந்திர பாபு நாயுடு முன்வைத்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரமில்லை என பிரஷாந்த் கிஷோர் பதிலடி கொடுத்துள்ளார்.
நாயுடு
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய பிரஷாந்த் கிஷோர், தேர்தல் தோல்வி பெரும் அரசியல் தலைவர்களைக் கூட பாதிக்கும் எனவும், தேர்தல் தோல்வி பயம்தான் அவரை (சந்திர பாபு) இப்படி பேச வைத்திருக்கிறது எனவும் கூறினார். பிகாரிகளை தவறுதலாக பேசுவதை நிறுத்திவிட்டு, ஆந்திர மக்களின் நலனில் கவனம் செலுத்தும்படி அவர் கேட்டுக் கொண்டார்.