தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

''தேசபக்தர் கோட்ஷே'' பிரக்யா கருத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விளக்கம்! - Parliamentary Affairs Minister Pralhad Joshi

டெல்லி: பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் மக்களவையில் காந்தியை சுட்டுக்கொன்ற கோட்ஷேவை தேசபக்தர் எனக் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கமளித்துள்ளார்.

''தேசபக்தர் கோட்ஷே'' பிரக்யா கருத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விளக்கம்!
''தேசபக்தர் கோட்ஷே'' பிரக்யா கருத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் விளக்கம்!

By

Published : Nov 28, 2019, 8:15 AM IST

மக்களவையில் சிறப்பு பாதுகாப்புக் குழு மசோதா மீதான கலந்துரையாடலின் போது திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேசினார். அதில் காந்தியை கோட்சே ஏன் சுட்டுக்கொன்றார் என்பது பற்றி பேசியபோது, பாஜக எம்.பி. பிரக்யா தாகூர் குறுக்கிட்டு கோட்ஷே போன்ற தேச பக்தரை உதாரணம் காட்டக்கூடாது எனக் கூறினார்.

இவரது பேச்சிற்கு எதிர்க் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, பாஜக உறுப்பினர்கள் அனைவரும் பிரக்யாவை உட்காருமாறு கூறினர். இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது குறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி விளக்கமளித்தார். அதில், ' பிரக்யா தாகூர் கோட்ஷேவை தேசபக்தர் எனக் கூறியதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அப்போது அவரது மைக் ஆன் செய்யப்படாததால், அவரது பேச்சு தவறாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் உத்தம் சிங் குறித்து பேசியபோது தான் பிரக்யா குறுக்கிட்டுள்ளார். இதனை என்னிடம் தனிப்படையாகவும் விளக்கமளித்துள்ளார்.

ஆ.ராசா

பிரக்யா தாகூர் கோட்ஷேவை தேசபக்தர் எனக் கூறியதற்கு எந்த ஆதாரமும் பதிவாகவும் இல்லை. எனவே, தவறான செய்தியை பரப்பவேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: காந்தியடிகளை புதல்வனாக்கிய பாஜக எம்பி; சர்ச்சைப் பேச்சின் பின்னணி?

ABOUT THE AUTHOR

...view details