நாடாளுமன்ற இரு அவைகளிலுமே இன்று காலை முதல், அஞ்சல் துறை தேர்வு அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டுவந்தன.
அஞ்சல் துறை தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் - ரவி சங்கர் பிரசாத் - தமிழ்
டெல்லி: அஞ்சல் துறை தேர்வுகள் அனைத்து பிராந்திய மொழிகளிலும் நடைபெறும் என சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Ravi Shankar Prasad
இதனைத் தொடர்ந்து இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மாநிலங்களவையில் பேசிய சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஜூலை 14ஆம் தேதி நடத்தப்பட்ட அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது.
இனி அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.