தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறிய சேமிப்பு திட்டங்கள் கிளை தபால் நிலையம் வரை நீட்டிப்பு...! - சிறிய சேமிப்பு திட்டம்

டெல்லி: கிராமங்களில் பெரும்பான்மையினருக்கு சிறு சேமிப்புத் திட்டத்தின் வசதியை வழங்கும் நோக்கில் அனைத்து சிறிய சேமிப்பு திட்டங்களையும் கிளை தபால் நிலையம் வரை அஞ்சல் துறை விரிவுபடுத்தியுள்ளது.

postal-dept
postal-dept

By

Published : Jul 26, 2020, 12:09 PM IST

நாடு முழுவதும் 1.31 லட்சம் கிளை தபால் நிலையங்கள் கிராமப்புறங்களில் செயல்பட்டுவருகின்றன. இந்த கிளை தாபல் நிலையங்களில், கடிதங்கள், வேக தபால், பார்சல்கள், மின்னணு பணப் பரிமாற்றம், கிராமப்புற அஞ்சல் ஆயுள் காப்பீடு போன்ற வசதிகளைத் தவிர, தபால் அலுவலக சேமிப்புக் கணக்கு, தொடர்ச்சியான வைப்புத்தொகை, நேர வைப்பு மற்றும் சுகன்யா சமிரதி கணக்குத் திட்டம் ஆகியவற்றை இதுவரை அளித்துவந்தன.

கிராமங்களில் பெரும்பான்மையானவர்களுக்கு சிறிய சேமிப்புத் திட்டத்தை வழங்குவதற்கும், அஞ்சல் துறை இப்போது அனைத்து சிறிய சேமிப்பு திட்டங்களையும் கிளை தபால் அலுவலகம் வரை நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், தபால் நிலையங்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி, மாத வருமான திட்டம், தேசிய சேமிப்பு சான்றிதழ், கிசான் விகாஸ் பத்ரா மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்கள் போன்ற வசதிகளையும் வழங்க அனுமதித்துள்ளது.

கிராமங்களில் வசிக்கும் மக்கள் இப்போது நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் பெறும் அதே தபால் அலுவலக சேமிப்பு வங்கி வசதிகளைப் பெற முடியும். அவர்கள், சேமிப்புகளை இந்த பிரபலமான திட்டங்களில் தங்கள் கிராமத்திலுள்ள தபால் அலுவலகம் மூலம் டெபாசிட் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details