தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வெட்டுக்கிளிகளிடமிருந்து மாநிலத்தை காக்க விழிப்புடன் இருங்கள்' - மகாராஷ்டிரா

ஹைதராபாத்: பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதலிலிருந்து தெலங்கானாவை காக்க அலுவலர்கள் விழிப்புடன் இருக்க வேண்டுமென தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

Telangana K Chandrasekhar Rao Locusts swarms Maharashtra பாலைவன வெட்டுக்கிளிகள் சந்திரசேகர ராவ் தெலங்கானா முதலமைச்சர் மகாராஷ்டிரா வெட்டுக்கிளிகள்
சந்திரசேகர ராவ்

By

Published : Jun 10, 2020, 11:39 PM IST

பாலைவன வெட்டுக்கிளிகள் இந்திய விவசாயிகளை பெருமளவில் அச்சுறுத்திவருகின்றன. மகாராஷ்டிரா, குஜராத்திலுள்ள விளைநிலங்களை தாக்கிய வெட்டுக்கிளிகள் தற்போது தெலங்கானவை நோக்கி படையெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

அண்மையில் தெலங்கானவிலிருந்து 200கி.மீ தொலைவிலுள்ள மகாராஷ்டிரா மாநில அஸ்மி கிராமத்தில் வெட்டுக்கிளிகள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதைத்தொடர்ந்து பாலைவன வெட்டுக்கிளிகள், தெலங்கானா மாநிலத்தை தாக்காமல் இருக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவேணடும் என தெலங்கானா முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வெட்டுக்கிளிகள் தாக்குதலிலிருந்து மாநிலத்தைப் பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து சந்திரசேகர ராவ் ஆய்வுக்கூட்டம் நடத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில எல்லையிலுள்ள மாவட்ட ஆட்சியர்கள் விழிப்புடன் இருக்க வலியுறுத்தினார். வெட்டுக்கிளிகளின் செயல்பாடுகளை கண்காணித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்க தலைமைச் செயலர் சோமேஷ்குமார் தலைமையில் குழு ஒன்றை அமைத்து சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details