தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து - ராகுலுக்கு முதலமைச்சர் நன்றி - congress

புதுச்சேரி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்ததற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

By

Published : Apr 2, 2019, 7:04 PM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று அம்மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,

"காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது வரவேற்கத்தக்க ஒன்றாகும். மேலும், ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் அளிக்கும் திட்டத்தின் மூலம் ஏழ்மை ஒழிந்து பட்டினி இல்லாமல் போகும்.

நரேந்திர மோடியின் ஆட்சியில் கோடிக்கணக்கான மக்கள் வேலையை இழந்துள்ளனர். வறுமை ஒழிப்போம் என்று முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூறியதன்படி தற்போது ராகுல்காந்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என்று கூறியுள்ளார்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் என கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அறிவித்துள்ளார். இதற்கு புதுச்சேரி காங்கிரஸ் கட்சி மற்றும் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ந்து பல ஆண்டுகளாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதற்காக சட்டமன்றத்தில் பல தீர்மானங்களை நிறைவேற்றி ராகுல் காந்தியிடம் கோரிக்கை எழுப்பினோம்" எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details