தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கள்ளத்தனமாக மது விற்றவர்கள் கைது

புதுச்சேரி : கரோனா தொற்று காரணமாக மதுப்பானக் கடைகள் மூடப்பட்ட நிலையில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கள்ளத்தனமாக மதுப்பாட்டில் விற்றவர்களை கைது செய்தது-காவல்துறை
கள்ளத்தனமாக மதுப்பாட்டில் விற்றவர்களை கைது செய்தது-காவல்துறை

By

Published : Mar 26, 2020, 1:05 AM IST

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கரோனா தொற்றுக் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூட கடந்த இரு தினங்களுக்கு முன்பு உத்தரவிட்டுருந்தார்.

இந்நிலையில் அரியாங்குப்பம் காவல்துறையினருக்கு, அபிசேகப்பாக்கம் டி.என் பாளையத்தில் கள்ளத்தனமாக மதுப்பாட்டில்கள் விற்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அரியாங்குப்பம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கள்ளத்தனமாக மதுப்பாட்டில்கள் விற்ற நபர்களை பிடித்து கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்களிடமிருந்து 6 ஆயிரம் ரூபாய் பணமும், மதுப்பாட்டில்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கள்ளத்தனமாக மதுப்பாட்டில் விற்றவர்களை கைது செய்தது-காவல்துறை

கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் போதிய விழிப்புணர்வின்றி இருக்கும் இதுபோன்ற நபர்களினால் அரசு என்ன நடவடிக்கை எடுத்தாலும் கரோனா தொற்றினை தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்

இதையும் படிங்க :தொடர் திருட்டு வழக்கில் ஈடுபட்ட இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details