தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமைச்சர் ஆதரவாளர் கொலை: மூன்று பேர் கைது

புதுச்சேரி: முன்விரோதம் காரணமாக அமைச்சர் ஆதரவாளர் கொலையில் முக்கியக் குற்றவாளிகள் மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

pondicherry party member murder case
pondicherry party member murder case

By

Published : Feb 4, 2020, 10:45 AM IST

புதுச்சேரி கிருமாம்பா பக்கத்தைச் சேர்ந்த சாம்பசிவம் (35). சமூகநலத் துறை அமைச்சர் கந்தசாமி ஆதரவாளரான இவர் கடந்த 31ஆம் தேதி சுப நிகழ்ச்சிக்காக உறவினர் வீட்டுக்கு பத்திரிகை வைக்க சென்றபோது அவர் மீது அடையாளம் தெரியாத கும்பல் வெடிகுண்டு வீசி கொலைசெய்துள்ளது.

கொலை குறித்து கிருமாம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதி சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கொலையில் முக்கியக் குற்றவாளிகளான பிள்ளையார்குப்பம் பகுதியைச் சேர்ந்த அமுதன், கூடப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அன்பரசன், நாகூர் பகுதியை சேர்ந்த பாக்கியராஜ் ஆகியோர் எனத் தெரியவந்தது.

இதையடுத்து நாகூர் பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜை கைதுசெய்த காவல் துறையினர் விசாரணையில் அமுதவன், அன்பரசன் இருவரும் கரையாம்புத்தூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து காவல் துறையினர் அவர்களைப் பிடிக்கச் சென்றபோது குற்றவாளிகளான அன்பரசன், அமுதன் அங்கிருந்த பாலத்திலிருந்து கீழே குதித்துள்ளனர்.

இதில் இரண்டு பேருக்கும் வலக்கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிக்கப்பட்டது.

அமைச்சர் ஆதரவாளர் கொலை - மூன்று பேர் கைது

கைதுசெய்யப்பட்ட மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாகக் காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

இதையும் படிங்க: இரண்டு மகள்களுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details