தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு

புதுச்சேரி: அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இம்மாதம் 8ஆம் தேதி பொது வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

strike announcement
strike announcement

By

Published : Jan 2, 2020, 3:43 PM IST

புதுச்சேரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் வருகின்ற 8ஆம் தேதி மத்திய அரசின் தொழிலாளர்கள் விரோத கொள்கையை கைவிடவேண்டும் என வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்தார்.

முன்வைக்கப்படும் கோரிக்கைகள்

  • அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.21,000
  • குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் ரூ. 10,000
  • விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்
  • வேலை வாய்ப்பை உருவாக்கும் தொழில் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுக்கவேண்டும்

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு திட்டத்தை கைவிடவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளது.

மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி - மாநில செயலாளர் பாலசுப்பிரமணியம்

இதில் கலந்கொள்ள இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தொழிற்சங்கங்கள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு கொடுக்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: தேக்கமடைந்த துணிகள்... தொடங்கியது போராட்டம்: நாளொன்றுக்கு ரூ.10 கோடி உற்பத்தி பாதிப்பு

ABOUT THE AUTHOR

...view details