புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கரோனா வைரஸ் பரவுதல் குறித்து அவரது அலுவலகத்தில் பதிவு செய்து வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “புதுச்சேரி மாஹேயில் மேலும் முதியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கேரள மாநிலம் கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.
கரோனா தொற்றிலிருந்து மாஹே பகுதியில் ஒருவர் குணமடைந்த நிலையில் மேலும் தொற்று அறிகுறியுடன் 4 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.
புதுச்சேரியில் கரோனா தொற்று தற்போது ஆறாக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு சார்பில் அத்தியாவசிய பொருள்கள் அனைத்தும் வழங்கப்படுகின்றன.