தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் எதிரொலி இணையதளத்திலிருந்து முதலமைச்சர் படம் நீக்கம் - தேர்தல் ஆணையம் அதிரடி - pondicherry cm narayanasamy

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால், இணையதளத்திலிருந்து முதலமைச்சர், அமைச்சர்களின் புகைப்படங்களை நீக்கி தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

pondicherry cm photo removed from government website

By

Published : Oct 2, 2019, 11:48 AM IST

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் 18 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். அதில் 11 வேட்புமனுக்கள் ஏற்பட்டதாகப் புதுச்சேரி தேர்தல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.

தேர்தல் சம்பந்தமாக தேர்தல் ஆணையம் சார்பில் பறக்கும்படை அமைக்கப்பட்டு, புதுச்சேரியில் ஆங்காங்கே காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இதற்கிடையே நேற்று அரசுத் துறை இணையதளங்களில் உள்ள முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் உள்ளிட்டோரின் புகைப்படத்தை நீக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details