தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுவையில் அந்தத் தொகுதிக்கு மட்டும் நாள் குறிச்சாச்சாம்...! - அதுவும் அக். 21தானாம் - தலைமை தேர்தல் ஆணையம்

புதுச்சேரி : காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் என தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம்

By

Published : Sep 22, 2019, 7:55 AM IST

புதுச்சேரி காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதியின் எம்எல்ஏவாக செயல்பட்டுவந்தவர் வைத்திலிங்கம் இவர் புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தலைவராகவும் திறம்பட செயல்பட்டுவந்தார். இந்நிலையில், அவர் கடந்த புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வசதியாக தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.

காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதி

மேலும், கடந்த புதுச்சேரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு சுமார் இரண்டு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்து, தனது காமராஜர் நகர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து காமராஜர் நகர் தொகுதி காலியானதாக தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், புதுச்சேரி- காமராஜர் நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார். பின்பு அக்டோபர் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் முன்னதாக வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க : "நானும் தான் துபாய் போனேன்... ஆனால், அதை விளம்பரப்படுத்தலயே"- புதுச்சேரி முதலமைச்சர் பளீர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details