தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரி தனிமாநில அந்தஸ்து - மக்கள் நீதி மய்யத்தால் மட்டுமே முடியும் - BYTE

புதுச்சேரி: தனி மாநில அந்தஸ்து விவகாரத்தில் காங்கிரஸ், என் ஆர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளை நம்ப வேண்டாம், மக்கள் நீதி மய்யம் மட்டுமே அதனைப் பெற்றுத் தரும் என்று டாக்டர் சுப்ரமணியன் வாக்குறுதி அளித்துள்ளார்.

டாக்டர் சுப்ரமணியன்

By

Published : Mar 30, 2019, 5:09 PM IST

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில தலைவரும், மக்களவை வேட்பாளருமான மருத்துவர் சுப்பிரமணியம் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, 'காங்கிரஸ் கட்சி, என்ஆர் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத்தருவதாக உறுதி அளித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், தற்போது இந்த இரு கட்சிகளும் மீண்டும் அதே வாக்குறுதியை அளித்து மக்களின் வாக்குகளை பெற முயற்சித்து வருகிறது. எனவே மக்கள் சற்று சிந்திக்க வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்தை நிச்சயம் பெற்றுத் தருவேன்.

மேலும், புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் கட்சி அடிக்கடி இடைத்தேர்தலை சந்திக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி மக்களின் வரிப்பணத்தை வீணாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சி மக்களின் வரிப்பணத்தை சிந்திக்காமல் கட்சியைப் பற்றி மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுகிறது' என அவர் குற்றம் சாட்டினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details