மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் நடந்த ரயிலேறி 17 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, இதற்கு மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்ட அவர், “நமது நாட்டின் வளர்ச்சியின் தூதுவர்களான இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, இதுபோன்ற கடும் துயரமான நேரத்தில் இலவச ரயில் பயணத்தை ஏன் அளிக்க முடியவில்லை?
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நமது குடிமக்களுக்கு இலவச விமானப் பயணத்தை ஏற்பாடுசெய்து, அதன் பொறுப்பை அங்கீகரித்து, அதற்கான போக்குவரத்து, உணவுக்காக ரூபாய் 100 கோடி வரை செலவழித்த மத்திய அரசுக்கு, இதனை ஏன் செய்ய முடியவில்லை?இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலத்திற்குத் திரும்ப ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகள், ரயில்களை மோசமாக வடிவமைக்கப்பட்டு, மிக மோசமாக ஒருங்கிணைக்கப்பட்டு தவறாக செயல்படுத்தப்பட்டது.