தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஓசி ஐஸ்கிரீமுக்காக வியாபாரியைத் தாக்கிய காவலர்களை விசாரிக்க உத்தரவு! - Noida

லக்னோ: நொய்டாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்டதற்கான பணத்தைக் கேட்ட வியாபாரியைத் தாக்கிய காவலர்களை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Noida

By

Published : Jul 23, 2019, 10:20 AM IST

Updated : Jul 23, 2019, 2:19 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் கடந்த 13ஆம் தேதியன்று காவல் ஆய்வாளர், காவலர் இருவர் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள ஒரு கடைக்குச் சென்று ரூ.150-க்கு ஐஸ்கிரீம் சாப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சாப்பிட்டதற்கு பணம் கேட்டதற்காக, கடை ஊழியரை அவர்கள் இருவரும் தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் கடை ஊழியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு அங்கிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து கடை ஊழியர் அமித் குமார் கூறுகையில், தான் காவல் நிலையத்திற்கு அருகில் ஐஸ்கிரீம் விற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு காவல் ஆய்வாளர், காவலர் வந்து ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டதாகவும், அதற்கு பணம் கேட்டதற்கு இருவரும் தன்னை தாக்கத் தொடங்கியதாகவும், மேலும், காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

இது குறித்து குத்தாம் புத் நகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் வைபவ் குமார், இச்சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Last Updated : Jul 23, 2019, 2:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details