தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'போதைப்பொருளைதடுப்பதில் காவல் துறையின் வேகம் குறைந்துவிட்டது' - முதலமைச்சர் - காவல்துறையின் வேகம் குறைந்துவிட்டது

புதுச்சேரி: போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதில் புதுச்சேரி காவல் துறையின் வேகம் குறைந்துவிட்டது என முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டியுள்ளார்.

cm-narayanasamy
cm-narayanasamy

By

Published : Feb 19, 2020, 7:29 PM IST

புதுச்சேரி மாநில சமூக நலவாரியம், தேசிய சமூகப் பாதுகாப்பு நிறுவனம் சார்பில் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்காக ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் திறன் மேம்பாட்டு கருத்தரங்கம் கல்வித்துறை வளாகத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட, முதலமைச்சர் நாராயணசாமி கருத்தரங்கத்தை தொடங்கிவைத்தார். பின்னர் பேசிய அவர், "புதுச்சேரிக்கு ரயில் மூலம் திருவண்ணாமலையிலிருந்து கஞ்சா வருகிறது.

அப்பகுதியைச் சேர்ந்த பெண் தாதா மூலம் வரும் கஞ்சாவை இங்கு பள்ளிகள், சுற்றுலா தளங்கள், கல்லூரிகள் உள்ளிட்டப் பகுதிகளுக்கு விற்கப்படுகின்றன. எனவே இதுதொடர்பாக காவல் துறையிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் காவல் துறையினர் இரண்டு நாட்கள் வேகமாக பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்கின்றனர். சிலநாட்களுக்கு அந்த வேகம் குறைந்துவிடுகிறது.

புதுச்சேரியில் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். முற்றிலும் போதைப்பொருளில்லா மாநிலமாக புதுச்சேரி திகழ வேண்டும், அதற்கான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது" என்றார்.

விழாவில் பேசிய முதலமைச்சர்

இதையும் படிங்க:'முதலமைச்சரும், அமைச்சர்களும் என்னை குறைகூறுவது புதிதல்ல' - கிரண்பேடி

ABOUT THE AUTHOR

...view details