உத்தரப் பிரதேச மாநிலம், படான் (Budaun) மாவட்டத்தில் காவல்துறையினர் துப்பாக்கி முனையில் வாகன சோதனை நடத்தினர். வாகன ஓட்டிகள் துப்பாக்கி முனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அச்சத்தில் உறைந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கி முனையில் வாகன சோதனை
படான்: காவல் துறையினர் துப்பாக்கி முனையில் வாகன சோதனை நடத்திய சம்பவம் படான் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாகன சோதனை
இது குறித்து படான் காவல்துறை அலுவலர் அசோக் குமார் திருப்பதி கூறுகையில், ‘படான் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபடும்போது பல குற்றவாளிகள் காவல்துறையினரை துப்பாக்கியால் சுட்ட சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இதனால் பல காவலர்கள் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இம்முறை காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக வாகன ஓட்டிகளை துப்பாக்கி முனையில் சோதனை செய்தனர்’ என்றார்.