தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

துணை காவல் ஆய்வாளர் பேச்சைக் கேட்டு கலைந்த மக்கள்

மும்பை: இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட சுமார் 500க்கும் மேற்பட்டோர் துணை காவல் ஆய்வாளர் பேச்சைக் கேட்டு கலைந்து சென்றனர்.

துணை காவல் ஆய்வாளர்
துணை காவல் ஆய்வாளர்

By

Published : Apr 21, 2020, 1:45 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஆசாத்பூர் பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கு இருந்த மக்கள் கூட்டத்தை கலைத்து, பின்னர் 20-25 நபர்கள் மட்டுமே தகனம் செய்யும் மைதானத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து துணை காவல் ஆய்வாளர் அபிஜித் ஜாதவ் கூறியதாவது;

இறுதி ஊர்வலத்தில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தகனம் செய்யும் மேடைக்கருகில் 20- 25 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களை காக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால் மீதம் உள்ளவர்களை கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டோம் எங்களின் வேண்டுகோளுக்கிணங்க மக்கள் கலைந்து சென்றனர்.

தற்போது வரை மகாராஷ்டிராவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் 4 ஆயிரத்து 203, உயிரிழந்தோர் 223 நபர்கள் என்ற எண்ணிக்கையில் உள்ளது குறிப்பிடதக்கது.

இதையும் படிங்க: செய்தியாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் - மத்திய அமைச்சர் அறிவுரை

ABOUT THE AUTHOR

...view details