தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஊரடங்கில் சுரங்கப்பாதை அமைத்த நக்சல்கள் - ஊரடங்கில் சுரங்கப்பாதை

தாண்டேவாடா: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஊரடங்கை சாதகமாகக் கொண்டு நக்சல்கள் அமைக்க முயன்ற சுரங்கப்பாதையை காவல் துறையினர் கண்டறிந்தனர்.

சத்தீஸ்கரில் சுரங்கப்பாதை அமைத்த நக்சல்கள்
சத்தீஸ்கரில் சுரங்கப்பாதை அமைத்த நக்சல்கள்

By

Published : Apr 19, 2020, 8:28 PM IST

கரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா பகுதியில் இந்தச் சூழலை சாதகமாகக் கொண்டு நக்சல்கள் சுரங்கப்பாதை அமைக்க முயன்றது தெரியவந்துள்ளது.

தாண்டேவாடாவைச் சேர்ந்த கதெல்கல்யாண் சாலையின் அடியில் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு பாதி பணி நிறைவுற்றிருந்த நிலையில், நக்சல்களின் இந்த நடவடிக்கை கண்டறியப்பட்டுள்ளது.

பின்னர், சுரங்கப்பாதையை காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் பல்லவ் நேரில் சென்று ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து, அப்பகுதியின் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கிராமவாசி ஒருவர் உயிரிழப்பு!

ABOUT THE AUTHOR

...view details