கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்ட ஆட்சியர் பொம்மநஹள்ளியின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த ரிசர்வ் படை காவலர், பிரகாஷ் குரானவர்(30) தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
பணி அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆட்சியர் பொம்மநஹள்ளி ஆய்வு மேற்கொண்டார்.