தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தலையீடு? - PMO

டெல்லி: ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவகலம் தலையீட்டால் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் அதிருப்தி கடிதம் எழுதியதாக என்.ராம் தி இந்து பத்திரிகை செய்தியில் தெரிவித்துள்ளார்.

PMO

By

Published : Feb 8, 2019, 12:13 PM IST

இந்தியா-பிரான்ஸ் இடையே 7.87 பில்லியன் யூரோ மதிப்பிலான ரபேல் போர் விமான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் ஒரு விமானத்தின் விலை நிர்ணையம், விமான எண்ணிக்கை, ரிலையன்ஸ் நிறுவனத்தின் தேர்வு ஆகியவற்றில் மத்திய அரசு முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு நிலவிவருகிறது.

இது தொடர்பாக ஆங்கில இந்து நாளிதழில் அதன் குழுமத் தலைவர் என் ராம் சில நாட்களுக்கு முன் சில ஆவணங்களின் விவரங்களை வெளியிட்டு ஒப்பந்தத்தில் விதிமீறல்கள் இருப்பதை வெளியிட்டிருந்தார். இந்நிலை தற்போது அவர் தி இந்து நாளிதழில் இப்பிரச்னை குறித்து பாதுகாப்பு துறை அமைச்சக அதிகாரிகளின் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டுள்ளதாவது:

ரபேல் ஒப்பந்தத்தில் பிரான்ஸ் ராணுவ அமைச்சக அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகம் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் காரணமாக பிரான்ஸ் அதிகாரிகளுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு பாதிப்பு ஏற்பட்டதாக அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்போதைய பாதுகாப்பு துறை செயலாளர் அனுப்பிய கடிதத்தில், 'பிரதமர் அலுவலகம் இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு சாதகமான பலன்கள் ஏற்பட்டு, இந்தியாவின் பங்கானது பலவீனமாக்கப்படும்' என அதிருப்தி தெரிவிக்கப்படிருந்ததாக தி இந்து நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details