தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'மோடியின் அரசியல் கரோனாவை விட ஆபத்தானது' - சிவசேனா

மும்பை: ராணுவத்தின் பெயரைப் பயன்படுத்தி, வாக்கு சேகரிக்கும் மோடியின் அரசியல் கரோனாவை விட ஆபத்தானது என சிவசேனா விமர்சித்துள்ளது.

மோடி
மோடி

By

Published : Jun 26, 2020, 5:44 PM IST

இந்திய, சீன எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ராணுவத்தின் பெயரைப் பயன்படுத்தி, பிகார் தேர்தலுக்காக வாக்கு சேகரிக்கும் பிரதமர் மோடியின் அரசியல், கரோனாவை விட ஆபத்தானது என சிவசேனா விமர்சித்துள்ளது.

இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ செய்தித்தாளான சாம்னாவில், "எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில், இந்திய ராணுவத்தின் பங்கை மேற்கோள்காட்டி சாதி அரசியலையும் இன அரசியலையும் மோடி தூண்டுகிறார்.

மஹர், மராத்திய, ராஜபுத்திர, சீக்கிய, கோர்க்கா, டோக்ரா ஆகிய படைபிரிவைச் சேர்ந்தவர்கள் எல்லைப் பகுதியில் போர் நிகழும்போது செயலற்று இருந்தார்களா? அல்லது எல்லையில் நின்று புகையிலை மென்று கொண்டு இருந்தார்களா?

அண்மையில்கூட, மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராணுவ வீரர் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலில் வீர மரணம் அடைந்தார். பிகார் தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்திய ராணுவத்தில் குறிப்பிட சாதியைச் சேர்ந்தவர்களுக்கும் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

இம்மாதிரியான அரசியல் கரோனாவை விட ஆபத்தானது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது, ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, அங்கு ஆட்சி செய்து வருகிறது.

இதையும் படிங்க: பாகிஸ்தானை கதி கலங்க வைத்த விமானப்படை வீரர் காலமானார்!

ABOUT THE AUTHOR

...view details