தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அகமதாபாத், சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பூமி பூஜை: காணொலி வாயிலாக இணையும் பிரதமர் மோடி!

டெல்லி: அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம், சூரத் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜனவரி 18) பூமி பூஜை செய்து வைக்கிறார்.

v
PM to perform Bhoomi Poojan of Ahmedabad Metro Phase-II, Surat Metro today

By

Published : Jan 18, 2021, 10:23 AM IST

குஜராத் மாநிலம் அகமதாபாத் மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டம் 28.25 கி.மீ. நீளத்துக்கு இரண்டு வழித்தடங்களுடன் அமையவுள்ளது. இதில் மொட்டேரா விளையாட்டு அரங்கிலிருந்து மகாத்மா மந்திர் வரை 22.8 கி.மீ நீளத்துக்கு முதல் வழித்தடம் அமைக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி, ஜிஎன்எல்யூ-விலிருந்து கிஃப்ட் சிட்டி வரை 5.4 கி.மீ நீளத்துக்கு இரண்டாம் வழித்தடம் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 5,384 கோடி ஆகும்.

இதே போன்று, சூரத் மெட்ரோ ரயில் திட்டம் 40.35 கி.மீ நீளத்துக்கு இரண்டு வழித்தடங்களுடன், சர்தானாவில் இருந்து டிரீம் சிட்டி வரை 21.61 கி.மீ நீளத்துக்கு முதல் வழித்தடம் அமைக்கப்படும். பேசனில் இருந்து சரோலி வரை 18.74 கி.மீ நீளத்துக்கு இரண்டாம் வழித்தடம் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ. 12,020 கோடி ஆகும்.

இந்த இரண்டு திட்டங்களுக்குமான பூமி பூஜை இன்று (ஜன. 18) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் காணொலி மூலம் இணையும் பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையை செய்யவிருக்கிறார்.

இந்த நிகழ்வில் குஜராத் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதலமைச்சர், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இதையும் படிங்க...தடுப்பூசி போட்டுக்கொண்டதில் 447 பேருக்கு எதிர்வினை: மத்திய அரசு

ABOUT THE AUTHOR

...view details