நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றிபெற்றது. அதன்படி மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாகப் பதவியேற்றது. இதனைத் தொடர்ந்து 17ஆவது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் -பிரதமர் நரேந்திர மோடி! - BJP
டெல்லி: நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பல நல்ல திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு அவசியம் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
PM seeks opposition's support ahead of 17th LS session
இதற்காக நாடாளுமன்றம் வந்த பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ‘நாட்டை காப்பாற்ற மீண்டும் மக்கள் பாஜகவிற்கு வாய்ப்பளித்துள்ளனர் என்றார்.
மேலும் பேசிய அவர், ”நாடாளுமன்றக் கூட்டத்தொடர் பல்வேறு புதிய திட்டங்களுடன் தொடங்கப்பட்டுள்ளது. அதனால் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சுதந்திரமாக ஒவ்வொரு கருத்தையும் முன்வைக்கலாம் எனவும் கூறினார்.