தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ட்விட்டரில் 5 கோடி ஃபாலோவர்ஸ்: உலகின் 3ஆவது பெரும் தலைவராக உருவெடுத்த மோடி!

பிரதமர் நரேந்திர மோடியை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஐந்து கோடியை எட்டியுள்ளது.

modi

By

Published : Sep 9, 2019, 1:33 PM IST

ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் தன்னை ஆக்ட்டிவாக வைத்திருப்பார். வெளிநாடு பயணம் மேற்கொள்கையில் தான் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவார். இவரது ஆக்ட்டிவான செயல்பாடுகளால் சமூக வலைதளங்களில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.

வெறும் சமூக வலைதளங்களாக மட்டும் அவற்றை பயன்படுத்தாமல், அதன்மூலம் தேர்தல் பரப்புரைகளையும் கடந்த காலங்களில் அவர் மேற்கொண்டிருந்தார்.

மோடியின் ட்விட்டர் பக்கம்

2018 ஜூலை மாதம்வரை அவரை ட்விட்டரில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 43.4 மில்லியனாக இருந்த நிலையில், இந்த ஒரு வருடத்தில் ஆறு மில்லியன் அளவு உயர்ந்து 50 மில்லியன் (5 கோடி) பின் தொடர்பாளர்களைக் கொண்ட சர்வதேச அரசியல் தலைவராக மோடி உருவெடுத்துள்ளார்.

இதன்மூலம், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா (108 மில்லியன் - 10.8 கோடி), தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (64 மில்லியன் - 6.4 கோடி) ஆகியோரின் வரிசையில் 50 மில்லியன் (5 கோடி) பின் தொடர்பாளர்களுடன் உலகின் மூன்றாவது பிரபலமான அரசியல் தலைவராகிறார் மோடி.

ABOUT THE AUTHOR

...view details