மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 27ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெறும் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக அறிவித்தார். ஆறாவது முறையாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ளும் மோடி, பல நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் மோடியுடன் மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உடன் செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆறாவது முறையாக ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி!
டெல்லி: ஜப்பானில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் ஆறாவது முறையாக பங்கேற்க உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
raveesh kumar
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில், ஜி-20 நாடுகளின் அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 20 நாடுகள் கலந்துகொள்ளும்.