வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் மோடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ள நிலையில் நேற்று பனாரஸ் பல்கலைக்கழகத்தின் வெளிப்புறத்தில் மதன் மோகன் மாளவியா சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கிருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார்.
கங்கை ஆர்த்தியில் கலந்துகொண்ட பிரதமர்! - வாரணாசி
உத்திரப்பிரதேசம்: வாரணாசியில் நேற்று தேர்தல் பரப்புரையை தொடங்கிய பிரதமர் மோடி, கங்கை ஆர்த்தியில் கலந்துகொண்டார்.
பரப்புரையை தொடர்ந்து கங்கை ஆர்த்தியில் பங்கெடுத்த பிரதமர்!
காரில் கையசைத்தவாறு பேரணியாக சென்ற மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் கங்கை ஆர்த்தியில் அவர் கலந்துகொண்டார்.
அப்போது உத்திரப்பிரதேச முதல்வர் யோதி ஆதித்யநாத், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, உத்திரப்பிரதேச பாஜக தலைவர் மகேந்திரநாத் பாண்டே உடனிருந்தனர்.