கர்நாடகா மாநிலத்தில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக இன்று பெங்களூரு வந்தடைந்தார். அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சதானந்த கவுடா உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.
கர்நாடகாவில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி! - PM Modi arrives at bangaluru
பெங்களூரு: பிரதமர் நரேந்திர மோடி கர்நாடக மாநிலத்தில் இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பெங்களூரு வந்தடைந்தார்.
PM Narendra modi arrives at bengaluru for two days state tour
பயணத்தின் முதல்நாளான இன்று தும்கூரு மாவட்டத்துக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ சித்தகங்கா மடத்துக்குச் செல்லவிருக்கிறார். பின்னர், ஸ்ரீ ஸ்ரீ சிவக்குமார சுவாமியின் நினைவு மண்டபத்திற்கு அவர் அடிக்கல் நாட்டவிருக்கிறார். அம்மாநில விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மோடி வழங்கவிருப்பதாக ஏற்கனவே பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: 'இந்துக்கள் இந்தியாவுக்கு வராமல் இத்தாலிக்கா செல்வார்கள்?'