பிரேசில் நாட்டில் கடந்த திங்கள் (06/07/20) அன்று அந்நாட்டு அதிபர் ஜெயிர் போல்சோனாரோவுக்கு நடத்திய பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், அதிபர் போல்சோனாரோ கரோனாவில் இருந்து மீண்டு வர பிரதமர் நரேந்திர மோடி வாழத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, " எனது நண்பன் ஜெயிர் போல்சோனாரோ விரைவில் குணமடைய என் வாழ்த்துகளுடன் பிரார்த்தனைகளும் இருக்கும்" என கூறியுள்ளார்.
உலகளவில் அமெரிக்காவை அடுத்து பிரேசில் கரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டு மக்கள் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 65 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க:WHO-விலிருந்து விலகுவது குறித்து ஐநாவுக்கு அமெரிக்கா நோட்டீஸ்