தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலகின் மிகப் பெரிய மைதானத்தில் உலகின் சக்திவாய்ந்த நபர்! - நமஸ்தே ட்ரம்ப்

அகமதாபாத்: உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா கிரிக்கெட் மைதானத்தில் உலகின் சக்திவாயந்த நபரான ட்ரம்ப்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Trump in Motera Stadium
Trump in Motera Stadium

By

Published : Feb 24, 2020, 2:03 PM IST

Updated : Feb 24, 2020, 2:30 PM IST

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவரது மனைவி மெலனியா ட்ரம்புடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் தனி விமானம் மூலம் இன்று காலை இந்தியா வந்திறங்கினார். இந்தியாவின் பாரம்பரிய நடன கலைஞர்கள் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து சபர்மதி ஆசிரமம் சென்ற அவர்கள், ஆசரிமத்தைச் சுற்றிப்பார்த்தனர்.

அதைத்தொடர்ந்து, உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான மொடீரா மைதானத்தில் ‘நமஸ்தே ட்ரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்க சாலை மார்க்கமாக கிளம்பியவர்கள், சற்று நேரத்திற்கு முன் மைதானத்தை வந்தடைந்தனர்.

அங்கிருந்த உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பிரதமர் மோடி, டரம்ப் - மெலனியா தம்பதிக்கு அறிமுகம் செய்துவைத்தார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து அவர்கள் மைதானத்திற்குச் சென்றனர். அங்கு கூடியிருந்த பெண்கள், மெலனியா ட்ரம்ப்புடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பொதுமக்கள் மைதானத்தின் கேலரிகளிலும் மிக முக்கிய நபர்கள் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடை அருகிலும் அனுமதிக்கப்பட்டனர்.

உலகின் மிகப் பெரிய மைதானத்தில் உலகின் சக்திவாயந்த் நபர்!

அங்கு அமைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத மேடையில் ஏறிய அதிபர் ட்ரம்ப், மெலனியா, பிரதமர் மோடி ஆகியோருக்கு மைதானத்தில் கூடியிருந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உற்சாக கரகோஷம் எழுப்பி வரவேற்பு அளித்தனர்.

அப்போது இரு நாட்டு தேசிய கீதங்களும் அங்கு ஒலிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது.

இதையும் படிங்க: ஐசனாவர் முதல் ட்ரம்ப் வரை - இந்தியாவுக்கு விசிட் அடித்த அமெரிக்க அதிபர்கள்!

Last Updated : Feb 24, 2020, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details