தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வளப்படுத்துங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்! - by election

நடைபெறுகிற மாநில சட்டமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பெருவாரியான மக்கள் வாக்களித்து ஜனநாயகத் திருவிழாவை வளப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்திருக்கிறார்.

pm-modi-tweet-on-maharashtra-election

By

Published : Oct 21, 2019, 9:59 AM IST

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தலோடு நாட்டின் 17 மாநிலங்களில் உள்ள காலியாகவுள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இதனையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலும், இதர மாநிலங்களில் சில தொகுதிகளுக்கான தேர்தலும் நடைபெறுகிறது.

தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும், தொகுதிகளிலும் உள்ள மக்கள் பெருவாரியாக தங்கள் வாக்குகளைச் செலுத்தி ஜனநாயகத் திருவிழாவை வளப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இதில் இளைஞர்கள் அதிகப்படியானோர் வாக்களிப்பார்கள் என்று நம்புகிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: தமிழில் கவிதையை வெளியிட்ட மோடி!

ABOUT THE AUTHOR

...view details